பள்ளிகளுக்கு 5 கோடி புத்தகம் வினியோகம்.. பள்ளி முதல் நாளில் மாணவர்களுக்கு வழங்க திட்டம் ..

by Editor News

அரசு பள்ளிகளுக்கு 5 கோடி புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், பள்ளி திறக்கும் முதல் நாளில் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பென்சில், ஜாமின்ரி பாக்ஸ், கிரையன்ஸ், சீருடை, பள்ளி பை, ஷீ உள்ளிட்டவைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு வினியோகிக்க புத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளன. 2023-24 கல்வி ஆண்டில் மாணவர்களுக்குகாக 5 கோடியே 16 லட்சம் விலையில்லா பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு பள்ளி திறக்கப்படும் முதல் நாளே மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. புத்தகங்களை அனைத்து கல்வி மாவட்டத்துக்கும் அனுப்பும் பணி முழுமையாக நிறைவடைந்தன. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கட்டுப்பாட்டில் அவை குடோன்களில் இருந்து அரசு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மாவட்ட வாரியாக தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு சில நாட்களுக்குள் இந்த பணி நிறைவடைந்துவிடும். பள்ளி ஜூன் முதல் வாரத்தில் திறக்கும்போது அன்றைய தினமே பாட புத்தகங்கள் வழங்க கல்வித் துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

Related Posts

Leave a Comment