பயறு வகைகள் அதிகமாக ஊட்டச்சத்துகளை கொண்டது பாசிப் பயறு. அன்றாடம் உணவில் பாசிப் பயறு சேர்த்துக் கொள்வது பல உடல்நல பிரச்சினைகளை தீர்க்கக் கூடியது.
பாசிப் பயறில் விட்டமின் பி9, பி1, விட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து ஆகிய பல ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.
பாசிப் பயறில் உள்ள எளிதில் கரையக்கூடிய பேக்டின் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது.
பாசிப் பயறில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவை இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றன.
பாசிப் பயறில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுத்து இதய பாதுகாப்பை மேம்படுத்துகிறது.
இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து ஹெர்லின் செயல்பாட்டை நிறுத்துவதால் உடல் எடை குறைக்க சரியான உணவாக உள்ளது.
கர்ப்பிணி பெண்களுக்கும், சிசு ஆரோக்கியத்திற்கும் தேவையான ஃபாலேட்டுகள் பாசிப் பயறில் அதிகமாக உள்ளது.
பாசி பயறில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளைத் தடுத்து சருமத்தைப் பாதுகாக்கிறது.