தமிழகம் “மோகா” அதி தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

by Editor News

வங்க கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல் அதி தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று (13.05.2023) மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர “மோகா” புயலானது, வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (14.05.2023) காலை 0830 மணி அளவில் வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 850 கிலோ மீட்டர் வடக்கு – வடமேற்கே நிலைகொண்டுள்ளது. இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை அதி தீவிர புயலாக கடக்கக்கூடும். அந்த சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 210 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 18ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தென்மேற்கு வங்கக்கடல் & இலங்கை கடலோர பகுதிகள்: 14.05.2023 & 15.05.2023: இலங்கை கடற்கரையை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 14.05.2023: சூறாவளிக்காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 130 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மாலை வரை காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள்: 14.05.2023: மாலை வரை குறாவளிக்காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.வட கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 14.05.2023: கறாவளிக்காற்றின் வேகம் மணிக்கு 200 முதல் 210 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 230 கிலோ மீட்டர் வேகத்திலும் நண்பகல் வரை வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து மணிக்கு 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 210 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

வட மேற்கு வங்கக்கடல் பகுதிகள்: 14.05.2023: கறாவளிக்காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று படுகிறார்கள். ஆழ் கடலிலுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்த படுகிறார்கள்.

Related Posts

Leave a Comment