கர்நாடகா தேர்தல்: 8 அமைச்சர்கள் பின்னடைவு …

by Editor News

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தற்போது அமைச்சர்கள் ஆக இருக்கும் 8 பேர் பின்னடைவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

கர்நாடக மாநில அமைச்சர்களான ஹாலப்பா ஆச்சார், சோமண்ணா, பி.சி.நாகேஷ், நாராயண கவுடா, முருகேஷ் நிராணி, ஸ்ரீராமலு, சுதாகர் மற்றும் கோவிந்த கார்ஜோள் ஆகிய எட்டு அமைச்சர்கள் வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவில் உள்ளனர்.

அதுமட்டுமின்றி சிகமகளூர் தொகுதியில் பாஜகவின் சிடி இரவி தொடர்ந்து பின்னடைவில் இருக்கிறார். மேலும் கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான கேஜிஎப் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூப கலா முன்னிலையிலும், பாஜக வேட்பாளர் அஷ்வினி சம்பங்கி பின்னடைவிலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Related Posts

Leave a Comment