கர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ..

by Editor News

கர்நாடக சட்டப்பேரவையில் 224 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று மாநிலம் முழுவதும் 36 மையங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 120 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில் பாஜக 70 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் 26 இடங்களில் முன்னிலை வகுத்து வரும் நிலையில் , மற்ற கட்சிகள் 8 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

இதன் காரணமாக கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. முன்னிலையில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை பெங்களூர் அழைத்துச் செல்ல 12 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில் கர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.அதேசமயம் கடலோர கர்நாடகாவில் உள்ள 13 தொகுதிகளில் 10ல் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் மூன்று தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.காங்கிரஸ் கட்சி கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment