தீவிர புயலாக வலுவடைந்தது மோக்கா.. கரையை கடக்கும்போது 175 கி.மீ வேகத்தில் காற்று வீசும் ..

by Editor News

தென்கிழக்கு வங்கக்கடலில் மோக்கா புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் நேற்று மாலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுவடைந்தது. இந்த புயல் போர்ட் பிளேருக்கு மேற்கே 510 கிலோமீட்டரிலும் வங்கதேசத்தின் தென் மேற்கே 1050 கிலோமீட்டர் தூரத்திலும் நிலைகொண்டுள்ளது.

இந்த புயல் மத்திய வங்கக் கடலில் காலை 8.30 மணிக்குள் அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வடக்கு வடகிழக்கு திசை நோக்கி நகரும் புயல், ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரைகளுக்கு இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 175 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவிய மோக்கா புயல் , தீவிர புயலாக வலுவடைந்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. திருச்சி அரியமங்கலம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.

Related Posts

Leave a Comment