உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத பேருந்து: ஸ்காட்லாந்தில் அடுத்த வாரம் முதல் தொடக்கம் ..

by Editor News

உலகின் முதல் ஓட்டுனர் இல்லாத பேருந்தை இயக்க ஸ்காட்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த பேருந்து பயணிகளுக்காக இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் ஓட்டுனர் இல்லாத கார்கள் ஏற்கனவே இயக்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டுநர் இல்லாத பேருந்து முதல் முறையாக ஸ்காட்லாந்து நாட்டில் இயக்கப்பட இருப்பதாக அந்நாட்டின் பேருந்து நிறுவன நிர்வாகி தெரிவித்துள்ளார்.

தானியங்கி பயணிகள் பேருந்துகள் இயக்கப்படுவது உலகிலேயே இதுதான் முதல் முறை என்றும் சென்சார்கள் பொருத்தப்பட்ட இந்த பேருந்துகள் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் முழு அளவிலான தானியங்கி பேருந்துகளுக்கு இன்னும் அரசு அனுமதி தராததால் ஒவ்வொரு பேருந்திலும் பாதுகாப்பு ஓட்டுனர் என்று ஒருவர் அந்த பேருந்து இயக்கப்படுவதை கண்காணித்துக் கொண்டிருப்பார் என்றும் பேருந்து நிர்வாகி தெரிவித்துள்ளார் .

Related Posts

Leave a Comment