தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்து 51 ஆயிரம் மாணவர்கள் தேர்வை எதிர்கொண்டனர். இந்த சூழலில் இன்று சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று காலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12ம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டார்.
இந்நிலையில் 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் பின்வருமாறு :
12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் – 7,55,451 (94.03%)
மாணவியர் 4,05,753 (96.38%) தேர்ச்சி அடைந்துள்ளனர்
மாணவர்கள் 3,49,697(91.45%) தேர்ச்சி அடைந்துள்ளனர்
மூன்றாம் பாலினத்தவர் 1 (100.00%) தேர்ச்சி
இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்த தேர்ச்சியில் 97.85% பெற்று விருதுநகர் முதலிடம்
அரசு பள்ளிகள் தேர்ச்சியில் 96.45% பெற்று திருப்பூர் முதலிடம்
தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்பட்டது.தேர்வு எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறை கைதிகள் என மொத்தம் 8.65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 8.17 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.