உப்பள தொழிலாளர்கள் நல வாரியம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் உப்பு தேவை பூர்த்தி செய்யும் வகையில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகம் உப்பு உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட உப்பு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உப்பளங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் குறைந்த ஊதியத்தில் பணியமர்தப்படுவதாக குற்றச்சாட்டை முன் வைக்கும் வகையில் , தங்களுக்கென தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட நாட்களாக அரசுக்கு முன் வைத்து வந்தனர். இந்த சூழலில் அரசு , அமைப்புசாரா தொழிலாளர்களான உப்பள தொழிலாளர்களுக்காக தனி நல வாரியம் உருவாக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் உப்பளத் தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று நல வாரியம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மற்ற நலவாரியங்களை போலவே உப்பளத் தொழிலாளர் நல வாரியத்திலும் இலவசமாக பதிவு செய்யலாம்; உப்பளத் தொழில் நல வாரிய உறுப்பினர்களும் இனி கல்வி உள்ளிட்ட அனைத்து உதவித் தொகையையும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.