இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது.
இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நாளை நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு நாடு முழுவதும் 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளும் நீட் தேர்வு எதிர்கொள்ள தயாராகியுள்ளனர். நாளை மதியம் 2 மணி முதல் 5:20 மணி வரை நீட் தேர்வு நடைபெற உள்ளது. நீட் தேர்வானது ஆங்கிலம், இந்தி, தமிழ் ,தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது.
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் கடந்த 4ஆம் தேதி வெளியிடப்பட்டது. http://Neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.