புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை …

by Editor News

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 46,2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்தது. நேற்று முன் தினம் சவரனுக்கு 728 ரூபாய் உயர்ந்த நிலையில், நேற்று 352 ரூபாய் உயர்ந்தது. இதேபோல் நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு 44 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,750 க்கும், ஒரு சவரன் 46,000 ரூபாய்க்கும் விற்பனையானது. அதன்படி நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.46,000ஐ தொட்டு புதிய உச்சத்தை எட்டியது.

இந்நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.5,775-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் 90 காசுகள் உயர்ந்து 83.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Posts

Leave a Comment