சகல தோஷங்களையும் நீக்கும் புண்ணிய ஸ்தலம்.. காஞ்சிபுரம் சித்ரகுப்த சுவாமி கோவில் …

by Editor News

உலகில் உள்ள ஜீவராசிகளின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவராக இந்துக்களால் கருதப்படுபவர் சித்ரகுப்த சுவாமி. சித்ரகுப்த சுவாமிக்கு புண்ணிய நகரம், முக்தி தரும் நகரம், நகரேஷூ காஞ்சி, கோவில் நகரம் என்றெல்லாம் போற்றப்படும் காஞ்சிபுரத்தில் தனி கோவில் அமைந்துள்ளது.

காஞ்சிபுரம் நெல்லுக்கார தெருவில் (காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில்) சித்ரகுப்தர் சுவாமி தனி கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் வழிபட்டால் கேது தோஷம், கலத்தர தோஷம், வித்யா தோஷம், புத்திர தோஷம் போன்றவை நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

பழமையான இந்த திருக்கோவிலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டு, பல லட்ச ரூபாய் செலவில் திருக்கோவில் பணிகள் அழகுற புதுப்பிக்கப்பட்டு, பணிகள் நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து ராஜகோபுரம் மூலவர் விமானம் பரிவாரங்கள், அருள்மிகு சித்ரகுப்த சுவாமிக்கு எண் மருந்து சாற்றி அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Related Posts

Leave a Comment