காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் கே.எல்.ராகுல் ..

by Editor News

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் நடப்பு ஐபில் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று முன் தினம் லக்னோ மைதானத்தில் நடைபெற்ற 43வது லீக் போட்டியில் பாப் டூபிளசிஸ் தலைமியிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் காரணமாக பெங்களூரு அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனையடுத்து 127 ரன்கள் எடுத்தால் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி தொடக்கம் முதலே தடுமாறியது. லக்னோ அணி, இறுதியில் 19.5 ஓவரில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது.

இதனிடையே பீல்டிங்கின் போது லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டத்தில் ராகுல் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கேன் பரிசோதனைக்காக அவர் நாளை மும்பை செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. கே.எல். ராகுல் தொடரிலிருந்து விலகியதால் லக்னோ கேப்டனாக குருனால் பாண்டியா செயல்படுகிறார்.

Related Posts

Leave a Comment