சென்செக்ஸ் 161 புள்ளிகள் வீழ்ச்சி …

by Editor News

அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித முடிவு, கோ பர்ஸ்ட் விமான சேவை நிறுவனம் திவால் நடவடிக்கைக்கு விண்ணப்பம் போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பார்தி ஏர்டெல் மற்றும் டெக் மகிந்திரா உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 161.41 புள்ளிகள் குறைந்து 61,193.30 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 57.80 புள்ளிகள் சரிவு கண்டு 18,089.85 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment