தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்..

by Editor News

தமிழகத்தில், நியாய விலைக் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம் புதன்கிழமை (இன்று) தொடங்கப்படவுள்ளதாக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் நீலகிரி உருளைக்கிழங்கு கூட்டுறவு சங்கத்தில் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உருளைக்கிழங்குகள் முறையாக தரம் பிரிக்கப்படுகிறதா? உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். பின்னர், அவரே களத்தில் இறங்கி உருளைக் கிழங்குகளை தரம் பிரித்தது, அங்கிருந்த தொழிலாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அதனைதொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன், உலக அளவில் சிறுதானிய ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

கேழ்வரகு உற்பத்தியை பெருக்கி தமிழ்நாடு முழுவதும் அனைத்து ரேசன் கடைகளிலும் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment