மீன் வடை

by Editor News

தேவையான பொருட்கள்

மீன் துண்டுகள் – 500 கிராம்
முட்டை – 1
உருளைக்கிழங்கு – 100 கிராம்
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் – 3
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க

செய்முறை

மீனை கழுவி சுத்தம் செய்து வாணலியில் சிறிதளவு நீர்விட்டு வேக வைக்கவும். பின்னர் அதை எடுத்து முள், தோல் நீக்கி நன்கு பிசையவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும். வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயைப் பொடியாக வெட்டவும். ஒரு பாத்திரத்தல் உதிர்த்த மீன், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, முட்டை எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் மசாலாவை சிறுசிறு வடைகளாகத் தட்டிப் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும். ருசியான மீன் வடை தயார்.

Related Posts

Leave a Comment