192
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் கே.ஏல்.ராகுல் 12 ரன்களும், கேல் மேயர்ஸ் 54 ரன்களும், படோனி 43 ரன்களும், ஸ்டோனிஸ் 72 ரன்களும், பூரன் 45 ரன்களும் அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் அடித்து, பஞ்சாப் அணிக்கு 258 ரன்கள் இலக்கு நிர்ணயித்தனர். இந்த ஸ்கோரானது ஐபிஎல் வரலாற்றிலேயே அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்னதாக 2013 ஆம் ஆண்டு பெங்களூர் அணி பூனே அணிக்கு எதிராக 263 ரன்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளது.
பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 201 ரன்கள் மட்டுமே சேர்த்து 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.