பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல் …

by Editor News

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நேற்று வெளியானது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் ஏற்கனவே ரசிகர்களிடையே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் 2ம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு நிலவியது.

உலகமெங்கும் சுமார் 3200 க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்டுள்ளது பொன்னியின் செல்வன் 2ம் பாகம் . மேலும் டிக்கெட் முன்பதிவு மூலம் மட்டுமே உலகளவில் ரூ 11 கோடிக்கு முன் விற்பனை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, அனைத்து மொழிகளிலும் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 2 ஆனது இந்திய அளவில் முதல் நாளில் ரூ.32 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. உலக அளவில் ரூ.65 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

முதல் பாகத்தை விட மிஞ்சும் அளவுக்கு விமர்சனங்கள் உள்ளதால் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் மே 1அரசு விடுமுறை என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் வரும் நாட்களில் வசூல் வேட்டை நடத்தும் என்று உறுதியாக கூறலாம். அநேகமாக முதல் பாகம் போல 2ம் பாகமும் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என்று கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment