மதுரை சித்திரை திருவிழாவையொட்டி, டாஸ்மாக் கடைகளை 6 நாட்கள் மூட கோரிய மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
“மதுரை சித்திரை திருவிழா தொடர்ச்சியாக 15 நாட்கள் கொண்டாடப்படும். குறிப்பாக மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், எதிர்சேவை மற்றும் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் ஆகியவை முக்கிய விழாக்களாக கொண்டாடப்படும். இந்த விழாக்களில் சுமார் ஐந்து லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வர். கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நிகழ்ந்த குற்றங்களின் விகிதம் அதிகரித்து உள்ளது.
ஆகவே அதனை தடுக்கும் விதமாக மதுரையில் 6 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடினால் குற்றச்சம்பவங்கள் குறைய வாய்ப்பாக அமையும். ஆகவே மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஏப்ரல் 30ஆம் லிருந்து மே5 ஆம் தேதி வரை 6 நாட்கள் மூட உத்தரவிட வேண்டும்”
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, மதுரை மாவட்ட ஆட்சியர் மனுதாரரின் மனுவை பரிசீலித்து, தேவை ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.