எந்தெந்த பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாது என்று பார்ப்போம் ..
தர்பூசணி: இது ஆச்சரியமாக இருந்தாலும், தர்பூசணியை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடக்கூடாது. தர்பூசணியை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது, அதில் உள்ள சத்துக்கள் மெதுவாக குறைய ஆரம்பிக்கும். தர்பூசணியை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்தால், ஃபுட் பாய்சன் அபாயமும் அதிகரிக்கிறது. ஏனெனில் வெட்டப்பட்ட தர்பூசணியை ஃபிரிட்ஜில் அப்படியே வைப்பதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வளர ஆரம்பிக்கின்றன. அவற்றை அப்படியே நேரடியாக உட்கொள்ளும்போது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்காதீங்க. எனவே ஒருபோதும் தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்.
ஆரஞ்சு – ஆரஞ்சு பழம் அமிலம் நிறைந்தது. இந்த அமிலம் குளிர்சாதனப் பெட்டியின் குளிரைத் தாங்க முடியாமல் அதன் சத்துக்களை இழக்கிறது. எனவே எந்த சிட்ரஸ் பழத்தையும் ஃபிரிட்ஜில் வைக்காமல் வெளியே வைக்க வேண்டும். தேவைப்பட்டால் குளிர்ந்த நீரில் போட்டு வையுங்கள்.
ஒரு அறிக்கையின்படி, ஆப்ரிகாட், ஆசிய பேரிக்காய், வெண்ணெய், வாழைப்பழம், கொய்யா, கிவி, மாம்பழம், தர்பூசணி, பப்பாளி, பேரீச்சம்பழம், பீச், பேரிக்காய், பேரிச்சம் பழம், பிளம்ஸ் போன்றவற்றையும் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது . ஏனெனில் இந்த பழங்கள் ஃப்ரிட்ஜில் வைத்தவுடன் அவற்றின் குணங்களை இழந்துவிடும். மாம்பழங்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் குறைந்து ஊட்டச்சத்து மதிப்பும் குறைகிறது.