நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

by Editor News

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் நேற்று அதிகாலையில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அந்நாட்டின் கெபுலாவான் பதுவில் நேற்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தால் வீடு, கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகள் மற்றும் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். அதே இடத்தில் சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது.

இந்நிலையில், நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆகப் பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இருந்த போதிலும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Related Posts

Leave a Comment