குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை வெளியேற காரணமே இதுவா …

by Editor News

கடந்த 2019ம் ஆண்டு குக் வித் கோமாளி என்ற சூப்பரான நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. சமையல் தெரிந்த பிரபலங்கள் மற்றும் அப்படி என்றால் என்னவென்றே தெரியாத சிலர் கோமாளிகளாக பங்குபெற ஜோராக நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது.

முதல் சீசனிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி 2,3 சீசன்கள் முடிந்து இப்போது 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த 4வது சீசனில் பழைய கோமாளிகளை தாண்டி மோனிஷா, ரவீனா, ஜி.பி.முத்து, சிங்கப்பூர் தீபன் ஆகியோர் புதிய கோமாளியாக களமிறங்கினார்கள்.

4வது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க திடீரென மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

அப்போதில் இருந்து அவர் வெளியேறிய காரணம் ஷிவாங்கி போட்டியாளராக களமிறங்கியதால் ஈகோ காரணம் என்றனர்.

அதேபோல் மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறார் என்றனர், இப்படி பல காரணங்கள் அவர் விலகியதற்கு காரணம் சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது என்ன செய்தி உலா வருகிறது என்றால் விஜய் தொலைக்காட்சியில் ஒரு புதிய ஷோ வரப்போகிறதாம், அதில் தொகுப்பாளினியாக களமிறங்கவே மணிமேகலை குக் வித் கோமாளி விட்டு விலகினார் என்கின்றனர்.

Related Posts

Leave a Comment