தேவையான பொருள்கள் :
கேரட் – 150 கிராம்
பாசிப்பருப்பு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
தேங்காய் துருவியது – 3டீஸ்பூன்
கடுகு – 1 தேக்கரண்டி
மிளகாய் வத்தல் – 2
சீரகம் – 1 தேக்கரண்டி
மஞ்சள் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
கோதுமை மாவு – 250 கிராம்
எண்ணெய்- தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – 1 டீஸ்பூன்
முதலில் கேரட்டை நறுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் கேரட் மற்றும் பருப்பை ஊற வைக்கவும். இதையடுத்து கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்த பருப்பை சேர்க்கவும். பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
பின்னர் கறிவேப்பிலை, நறுக்கிய கேரட், சிவப்பு மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். கடாயை மூடி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். வெந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி ஆற வைக்கவும்.
கேரட் பப்ஸ் செய்வதற்கு, மாவை எண்ணெய் சேர்த்து கலக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் மாவை திரட்டி அதில் பொரியலை சேர்த்து பப்ஸ் போன்று செய்துக்கொள்ளவும். இறுதியில் எண்ணெய்யை சூடாக்கி பொரித்து எடுத்தால் போதும். சுவையாக கேரட் பப்ஸ் ரெடி.