தேவையான பொருள்கள்:
அரிசி மாவு – 2 கப்
ராகி மாவு ( கேழ்வரகு) – 1 கப்
துருவிய தேங்காய் – 1 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – 2 சிட்டிகை
கேழ்வரகு புட்டை நீங்கள் செய்வதற்கு முன்னால், மேற்கூறியுள்ள அரிசி மாவு, ராகி மாவு, தேங்காய் துருவல் போன்றவற்றை முதலில் எடுத்து வைத்து கொள்ளவும். பின் தேங்காய் துருவல் தவிர்த்து அனைத்து பொருள்களையும் ஒரு பாத்திரத்தில் நன்கு கலந்துக் கொள்ளவும்.
பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து விட்டு சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் ஈரமான துணியால் மூடி வைக்கவும். இதையடுத்து இட்லி பாத்திரத்தில் அல்லது ஒரு புட்டு மேக்கரில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். பின்னர் எப்போதும் போல பிசைந்து வைத்துள்ள மாவை தட்டில் வைத்து ஆவி வரும் வரை வேக வைக்கவும்.
இறுதியில் வெளியில் எடுத்து உங்களுக்கு தேவையான அளவு சர்க்கரை மற்றும் தேங்காய் துருவலைச் சேர்த்து பரிமாறலாம். இதோடு நீங்கள் குழல் புட்டு வேண்டும் என்று நினைத்தால், புட்டு மேக்கருக்குள் சிறிதளவு மாவு, இதைத்தொடர்ந்து தேங்காய் துருவல் என மாறி மாறி வைக்க வேண்டும். பின்னர், மூடியை மூடி சுமார் 8- 10 நிமிடங்கள் நீராவியில் வேக வைக்கவும்.
நன்கு ஆவி வந்ததும் வெளியில் எடுத்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பரிமாறலாம்.