10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு …

by Editor News

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது.

10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்.6ம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வை தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 4,216 மையங்களில் 9.76 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

இதில் 37,798 தனித்தேர்வர்கள், 13,151 மாற்றுத் திறனாளிகள், 5 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 2,640 சிறை கைதிகள் ஆகியோர் அடங்குவர். சுமார் 55,000 ஆசிரியர்கள் பொதுத்தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 4,235 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. மேலும், விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. மே 3ம் தேதி வரை இந்தப்பணிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment