தேவையான பொருட்கள் :
நன்கு பழுத்த பப்பாளி துண்டுகள் – 1 கப்.
ஆரஞ்சு பழ சாறு – 2 ஸ்பூன்.
தேன் – ஒரு ஸ்பூன்.
பவுல் – ஒன்று.
பேஸ் பேக் செய்முறை :
நன்கு பழுத்த பப்பாளியை சிறு சிறு துண்டுகளா வெட்டி ஒரு பவுலில் வைக்கவும். பின்னர், இதனுடன் ஆரஞ்சு பழ சாறு மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்கு மசித்துக்கொள்ளவும்.
மசிக்க கடினமாக இருந்தால், மிக்சி ஜாரில் போட்டு நன்றாக மைப்போல அரைத்து எடுத்தால், பேஸ் பேக் தயார்.
எப்படி பயன்படுத்துவது?
பேஸ் பேக்கை உபயோகிப்பதற்கு முன், உங்கள் முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும். பின்னர், உங்கள் முகத்தில் ஈரம் இல்லாமல் ஒரு துணியை வைத்து துடைக்கவும்.
இப்போது, முறையாக தயாரித்த இந்த பேஸ் பேக் கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே விட வேண்டும். பின்னர், குளிர்ந்த நீரில் முகத்தை சுத்தம் செய்ய நல்ல மாற்றம் தெரியும்.
தேன் பயன்படுத்துகையில் சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனை ஏற்படலாம். எனவே, இந்த பேக்கினை தேன் இல்லாமலும் தயாரித்து பயன்படுத்தலாம். வாரம் 2 முறை இந்த பேக் பயன்படுத்தினால் நல்ல மாற்றம் தெரியும்.