செய்முறை
இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் படுத்து, கைகளால் உடலை மேலே தூக்கி, கால்கள் தலைக்கு பின்னால் தரையை தொடுமாறும், பின் கைகள் தரையில் ஊன்றியிருக்குமாறும் செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இந்த நிலையில் சில நிமிடங்கள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். முதுகு தண்டில் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. வயிற்றில், முதுகில் அறுவை சிகிச்சை செய்தர்களுக்கும் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
பயன்கள்
இந்த ஆசனம் பார்ப்பதற்கு கஷ்டமானதாகத் தான் தெரியும். இது தைராய்டு சுரப்பியைத் தூண்டுகிறது. ஆனால் இந்த ஆசனத்தின் மூலம் இனப்பெருக்க உறுப்புகள் தூண்டப்பட்டு, மசாஜ் செய்தது போல் இருக்கும். மேலும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள், இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால், நிச்சயம் நல்ல பலனைக் காணலாம். வயிற்று உறுப்புகளின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. முதுகெலும்பு மற்றும் தோள்பட்டைகளை நீட்டி பலப்படுத்துகிறது. இந்த ஆசனம் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க உதவுகிறது. இது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.இந்த ஆசனம் மெனோபாஸ் அறிகுறிகளை நிர்வகிக்க உதவுகிறது. இது கருவுறாமை, சைனசிடிஸ் மற்றும் முதுகுவலிக்கு எதிராகவும் பயனுள்ளதாக இருக்கும்.