இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இரு தினங்களாக சரிவை சந்தித்து வருகிறது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வெகுவாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, அண்மைக்காலமாக மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனையடுத்து அதிகரிக்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும், மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைக்குமாறும் மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இதனால் முககவசம் அணிதல் உள்ளிட சில கொரோனா கட்டுப்பாடுகள் சில மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா கொரோனா பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை நாள்தோறும் வெளிட்டு வருகிறது, அந்தவகையில், கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 10,753 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 11 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை , நேற்று 10,743 ஆக குறைந்திருந்தது. இன்று 2வது நாளாக மேலும் குறைந்திருக்கிறது. அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிற்கு 23 பேர் உயிரிழந்துள்ள நிலையில் , தற்போது மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 53,720ல் இருந்து 57,452 ஆக அதிகரித்துள்ளது.