சென்னை டூ கன்னியாகுமரி இந்த இடங்களை மிஸ் பண்ணாம பாருங்க ..

by Editor News

ஆரோவில் :

புதுவை – விழுப்புரம் வழியில் அமைந்துள்ள ஒரு ஆராய்ச்சி நகரம் ஆகும். புதுச்சேரிக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த நகரம் உங்கள் வீட்டு குழந்தைகளுடன் சென்று பார்க்க வேண்டிய இடம் ஆகும்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் :

சென்னைக்கு மிக அருகில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த சரணாலயம், உலக புகழ் பெற்ற பறவைகள் சரணாலயமாகும். அரிய வகை பறவை இனங்கள் பலவற்றை இங்கு ஒரே இடத்தில் காணலாம்.

பிச்சாவரம் :

கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு மிக அருகில் அமைந்திருக்கும் இந்த பிச்சாவரத்தில் மாங்குரேவ் காடுகள் உள்ளன. உண்மையில் இது ஒரு கடல் சார் காட்டுப்பகுதி ஆகும். படகு சவாரியும் உள்ளது. அதேநேரம் 177-க்கும் மேற்பட்ட பறவை இனங்களை கொண்டிருக்கும் ஒரு அற்புதமான இடமாகவும் இது உள்ளது.

திருச்சி :

தென் தமிழகத்தின் மிக முக்கிய நகரமாக கருதப்படும் திருச்சி உண்மையில் ‘கோயில்கள் நிறைந்த ஒரு ஆன்மீக நகரம் ஆகும். பழமை மாறா கட்டடங்கள், கோவில்கள், மலைக்கோட்டை என பலவற்றை இங்கு கண்டு ரசிக்கலாம்.

கொடைக்கானல் :

திருச்சிக்கு அடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த கொடைக்கானல், இந்தியர்களின் பிரபலமான தேன்நிலவு தலம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 7200 அடி உயரத்தில் இருக்கும் இந்த இடம் சாகச விரும்பிகளுக்கு ஏற்ற இடம் ஆகும்.

மதுரை :

தென் தமிழகத்தின் பிரபலமான ஆன்மீக நகரமாக பார்க்கப்படும் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில், ஆயிரம் கால் மண்டபம், திருமலை நாயக்கர் மகால் போன்ற பல விஷயங்களை நாம் காணலாம்.

அகஸ்தியர் அருவி :

திருநெல்வேலியிலிருந்து சுமார் 42-கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த அகஸ்தியர் அருவி – பாபநாசம் அருவி எனவும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் காணப்படும் மிக முக்கிய அருவிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது இந்த அருவி.

குற்றாலம் :

திருநெல்வேலியிலிருந்து சுமார் 60 கிமீ தொலைவிலும், தென்காசியிலிருந்து 7 கிமீ தொலைவிலும் அமைந்திருக்கும் இந்த குற்றாலம் இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு சுற்றுலா தலம் ஆகும்.

Related Posts

Leave a Comment