147
இலங்கையில் 2023ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், 24 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி இடைவெளி காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இடம்பெற்று வரும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி குழுவின் வசந்த கால கூட்டத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் சுமார் 17 பில்லியன் டொலர்கள் பெறப்படவுள்ள கடன் நிவாரணத்தின் மூலம் ஈடு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மீதமுள்ள 07 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு நிதியுதவியின் மூலம் ஈடுசெய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.