108
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 352 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 45,760 எனும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இன்று தங்கம் விலை சவரனுக்கு 352 ரூபாய் அதிகரித்து, புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராம் ரூ. 5,720க்கும், ஒரு சவரன் ரூ. 45,760 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 20 காசுகள் அதிகரித்து , ஒரு கிராம் வெள்ளி ரூ. 83 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அக்ஷயதிருதியை நெருங்கும் நிலையில் தங்கம் விலை அதிகரித்து வருவது நகைப்பிரியர்களை கவலையடையச் செய்துள்ளது.