171
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு முதல் உலக நாடுகளையே ஆட்டிவைத்த கொரோனா வைரஸ் பாதிப்பு அண்மையில் தான் சற்று குறைந்தது போல் தோன்றியது. லாக்டவுன், எப்போதும் முகக்கவசம், மருத்துவமனை, பரிசோதனை, சமூக இடைவெளி என 2 ஆண்டுகள் ஆட்டிவைத்த கொரோனா பாதிப்பு பின்னர் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. இதனையடுத்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்நிலையில் தற்போது தொற்று பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,158 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 44,998 பேர் தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.