கொரோனாவை தடுக்க தமிழக அரசும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்கிற உத்தரவு அரசு உத்தரவிட்டிருக்கிறது. காய்ச்சல் முகாம்களை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. 2099 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 186 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . கொரோனாவால் ஒருவர் உயிரிழந்தும் உள்ளார்.
இந்நிலையில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காய்ச்சல் அதிகமானதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனை நடந்து வருகிறது. ரத்த மாதிரி பரிசோதனைகள் முடிவுகள் வந்த பின்னர்தான் அவருக்கு வந்த காய்ச்சல் எந்த மாதிரியான காய்ச்சல் என்று தெரியவரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.