மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் இன்று மோதல் ..

by Editor News

மும்பை அணி தனது முதல் இரு போட்டிகளில் பெங்களூரு மற்றும் சென்னை அணியிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், கேமரூன் கிரீன் , சூர்ய குமார் யாதவ் யாரும் பெரிதாக ரன்களை குவிக்கவில்லை. மும்பை அணி தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தையே மறந்துவிட்டது போல் இருந்தது. பந்துவீச்சு மும்பை அணிக்கு பலவீனமாக உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் மும்பை அணி ஒருங்கிணைந்த மாற்றத்தை ஏற்படுத்துவது இப்போது மிக அவசியம்.

ஸ்டார் ப்ளேயர்கள், பர்ஃபாமென்சர்கள் இருந்தும் அந்த அணி கடந்த இரு போட்டிகளில் தடுமாறியது. தோல்வியில் இருந்து மீண்டு மும்பை அணி எழுச்சி பெற வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். எல்லா வீரர்களும் ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது மீண்டும் மும்பை அணி வெற்றி பாதைக்கு திரும்பும்.

ஐபிஎல் போட்டிக்கு முன்பு ஆஹா.. ஓஹோன்னு புகழப்பட்ட பிரித்வி ஷா ரன் எடுக்கவே தடுமாறுகிறார். டெல்லி அணி முந்தைய போட்டிகளின் தோல்விகளில் இருந்து பாடம் கற்று இன்றைய போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்புவதில் மும்முரமாக இருக்கும். அவர்களுக்கு இருக்கும் ஒரே சாதகமான விஷயம் இன்றைய போட்டி அவர்களின் ஹோம் க்ரவுண்டான டெல்லியில் நடப்பதுதான்.

மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளில் இதுவரை நேருக்கு நேர் 32 ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் மும்பை 17 போட்டிகளிலும் டெல்லி 15 போட்டிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளது. இவ்விரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Related Posts

Leave a Comment