கருமையாக இருக்கும் உதடுகளை சிவப்பாக மாற்ற இதை ட்ரை பண்ணுங்க ..

by Editor News

தேவையான பொருட்கள் :

தக்காளி – 1.

எலுமிச்சை பழம் – 1.

மஞ்சள் பொடி – 1/2 ஸ்பூன்.

முதலில் எடுத்துக்கொண்ட எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, பின் புழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். தொடர்ந்து தக்காளியை மசித்து தக்காளி சாறு எடுத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு மிக்ஸிங் கோப்பையை எடுத்து அதில் 1/2 மஞ்சள் பொடி மற்றும் 1 ஸ்பூன் அளவுக்கு தக்காளி சாறு சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ளவும்.

இறுதியாக இதனுடன் 1/2 ஸ்பூன் அளவுக்கு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விட உதட்டின் கருமையை போக்கும் மாஸ்க் ரெடி.

முறையாக தயார் செய்த இந்த மாஸ்கினை உதட்டுக்கு தடவி 15 – 20 நிமிடங்கள் நன்கு உலர விட்டு பின் குளிர்ந்த நீரில் சுத்தம் செய்துவிடவும். வாரம் 3 முறை இவ்வாறு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

Related Posts

Leave a Comment