130 கி.மீ வேகத்தில் செல்லும் சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் ..

by Editor News

சென்னை -கோவை வந்தே பாரத் ரயில் 130 கி.மீ. வேகத்தில் செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனையொட்டி தெற்கு ரயில்வே முழுவதும் இதுவரை 44 ரயில் சேவைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பான தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெற்கு ரயில்வேயின் ஒருங்கிணைந்த சீரிய முயற்சிகளால் அதன் முக்கியமான ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் புதிய சென்னை – கோவை – சென்னை வந்தே பாரத் ரயில் சென்னை – ஜோலார்பேட்டை இடையே மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும். புதிய வந்தே பாரத் ரயில் இலக்கை அடைய 5 மணி நேரம் 50 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இதனால் பயணிகளுக்கு ஒரு மணி நேரம் 20 நிமிட பயண நேரம் சேமிக்கப்படும். சென்னை – பெங்களூரு சதாப்தி உள்ளிட்ட பிரிவில் இயக்கப்படும் மற்ற ரயில்களும் ஜூன் முதல் பயண நேரம் கணிசமாக குறைக்கப்படும்.

Related Posts

Leave a Comment