தேவையான பொருட்கள் :
பனீர் – 150 கிராம்.
தக்காளி – 2.
பூண்டு பல் – 3.
அரிசி – 2 கப்.
முட்டைக்கோஸ் – 100 கிராம்.
வெங்காயம் – 1.
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்.
மிளகு பொடி – 1/2 ஸ்பூன்.
சோயா சாஸ் – 2 ஸ்பூன்.
உப்பு, எண்ணெய், கொத்தமல்லி – போதுமான அளவு.
செய்முறை :
ப்ரைட் செய்வதற்கு முன்னதாக, எடுத்துக்கொண்ட அரிசியை 20 நிமிடங்கள் வேகவைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். சாத்தம் குழையாமல், உதிரி உதிரியாக இருக்க வேண்டும்.
இதை தொடரந்து எடுத்துக்கொண்ட வெங்காயம், தக்காளி, முட்டைக்கோஸ் ஆகியவற்றை தனித்தனியே (பொடியாக) நறுக்கி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தற்போது ப்ரைட் ரைஸ் செய்ய, கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
எண்ணெய் நன்கு காய்ந்ததும் இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இதில் தக்காளி, மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து 3 – 4 நிமிடங்கள் வதக்கிக்கொள்ளவும்.
பின்னர், போதுமான அளவு வடித்த சாதம், சோயா சாஸ் மற்றும் பொடியாக நறுக்கிய பன்னீர் சேர்த்து 3 – 4 நிமிடங்கள் நன்கு வேக வைக்கவும்.
இறுதியாக இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான பன்னீர் ப்ரைட் ரைஸ் ரெடி.