142
ட்விட்டர் நிறுவனத்தை கடந்த ஆண்டு பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார் என்பதும் அதன் பிறகு அவர் அதில் பல அதிரடி நடவடிக்கைகளை கொண்டு வந்தார் என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் டாக் காயின் என்ற கிரிப்டோ கரன்சி லோகோவான நாய் லோகோவை எலான் மஸ்க் டுவிட்டருக்கு வைத்தார். இந்த புதிய லோகோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது மீண்டும் குருவி ட்விட்டர் லோகோவாக எலான் மஸ்க் மாற்றி உள்ளார். இதனை அடுத்த ட்விட்டர் பயனர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் .