குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புகள் குறைவு என டிஎன்பிஎஸ்சி விளக்கம் …

by Editor News

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் எழுத்துத் தேர்வு 2022ம்ஆண்டு ஜுலை 24ம் தேதி நடைபெற்றது. மொத்தம், 7301 காலி இடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் 10 ஆயிரத்து 117 இடங்களாக அதிகரித்தது. அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர் 425, இளநிலை உதவியாளர் மற்றும் பில் கலெக்டர் – 4,952, தட்டச்சர் – 3,311, சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) – 1,176 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், 8 மாத கால தாமதத்திற்கு பின்னர் கடந்த மாதம் 24ம் தேதி வெளியிடப்பட்டது.

தேர்வர்கள் பலரும் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டி வரும் நிலையில், குரூப்4 ஸ்டெனோ டைப்பிஸ்ட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு குறைவு என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. அதில், “ ஒரு குறிப்பிட்ட தேர்வுக்கான பயிற்சி வழங்குவதில் குறிப்பிட்ட பகுதி என்பது முன்னணியில் இருக்கும். அது போன்று ஸ்டேனோ டைப்பிங் பயிற்சி பொருத்தவரை காஞ்சிபுரம், சங்கரன்கோவில் என்பது கடந்த காலங்களிலும் அதிகமான தேர்வர்கள் தேர்வாகியுள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் இருந்து 400க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி தொடர்பாக புகார் வரவில்லை. புகார் வந்தால் தேர்வாணையம் கவனத்தில் கொள்ளும். காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்த பின் ஓஎம்ஆர் விடைத்தாள் இணையத்தில் பதிவேற்றப்படும். ஓ.எம்.ஆர். தாள்களை நேரடியாக ஆய்வு செய்து தவறு இருந்தால் கவனத்திற்கு கொண்டு வரலாம்” என்று தெரிவித்திருக்கிறது .

Related Posts

Leave a Comment