பெங்களூரு அணியின் சவாலை சந்திக்குமா கொல்கத்தா

by Editor News

கடந்த 2008 ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 8 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் 9 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத உள்ளன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலாவது லீக் போட்டியில் 7 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தின் காரணமாக விலகியது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் விலகியதும், அதிரடி பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் இன்னும் அணியுடன் இணையாததும் பின்னடைவை கொடுத்துள்ளது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது முதலாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. காயம் காரணமாக முன்னணி வீரர்களை இழந்து தவிக்கும் கொல்கத்தா நைட் ரைடஸ், பெங்களூரு அணியை சமாளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 30 போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் 16 போட்டிகளில் கொல்கத்தாவும், 14 போட்டிகளில் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment