தேவையான பொருட்கள் :
உளுந்தம் பருப்பு – 200 கிராம்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப் பொடி – சிறிதளவு
நல்ல எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடலை எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை :
1.உளுந்தம் பருப்பை முதலில் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் வடிகட்டில் உளுந்தம் பருப்பைச் சேர்த்து, தண்ணீர் முழுவதையும் நன்றாக வடிகட்டவும்.
2. இப்போது உளுந்தம் பருப்புடன் தேவையான உப்பினைச் சேர்த்து, தண்ணீர் சேர்க்கமால் கொர கொரவென அரைத்துக் கொள்ளவும். அதாவது உளுந்தம் பருப்பினை 70 சதவீதம் அரைத்தால் போதுமானதாக இருக்கும்.
3. மிளகு, சீரகத்தை தனித்தனியாக தண்ணீர் சேர்க்காமல், கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுந்த மாவு, பொடித்த மிளகுப் பொடி, சீரகப் பொடி, அசிரி மாவு, பெருங்காயப் பொடி ஆகியவற்றை சேர்த்து பிசைய வேண்டும். இப்போது 1 டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெயை பிசைந்த உளுந்து கலவையில் சேர்த்து, நன்கு ஒருசேர பிசைந்து கொள்ளவும்.
5. இப்போது உளுந்த மாவை சிறிதளவு எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.