214
இறக்குமதி தடையை நீக்கி பயறு மற்றும் சிவப்பு சீனியை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு சுங்க வரி விதிக்க வேண்டும் அல்லது உரிய அனுமதி வழங்க வேண்டும் என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.
ரூபாயின் வலுவினால் பொருட்களின் விலைகள் 10% முதல் 12% வரை குறைந்துள்ளதாகவும் நிஹால் செனவிரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.