மீண்டும் அதிரடியாக பரவும் கொரோனா – ஒரே நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பா?

by Editor News

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோன பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த வியாழக்கிழமி ஒரே நாளில் இந்தியாவில் 3016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகமாகும். இதேபோல் நேற்று முன் தினம் ஒரே நாளில் இந்தியாவில் 3094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனிடையே நேற்று கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது. நேற்று ஒரே நாளில் 994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் உயர்ந்தது. நேற்று ஆயிரத்திற்கு கீழே குறைந்த நிலையில், இன்று மீண்டும் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டியம், கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 3 இலக்கங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment