மணக்க மணக்க மீன் குழம்பு ரெஸிபி …

by Editor News

தேவையான பொருட்கள் :

அயிலை மீன் – 1 கிலோ

சின்ன வெங்காயம் – 8

தக்காளி – 1

இஞ்சி – 1

பூண்டு – 7

கறிவேப்பிலை- சிறிதளவு

பச்சை மிளகாய் – 3

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

புளி – நெல்லிக்காய் அளவு

தனியா தூள் – 1.1/2 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

வெந்தயம் -1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

1. முதலில் அடுப்பில் கடாயை வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் சின்ன வெங்காயம் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

2. பின்பு அதே கடாயில் முழு தக்காளியை அப்படியே சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.வ்இப்போது சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை மிக்ஸி அல்லது அம்மியில் நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.

3. பின்பு அடுப்பில் மண் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

4. அடுத்து அதில் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், தனியா தூள், சிவப்பு மிளகாய் சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்கவும்.

5. இப்போது அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி-வெங்காய விழுது சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் புளி தண்ணீர் ஊற்றித் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

6. பின்பு உப்பு சேர்த்து 6-7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்து பச்சை வாசனை போனபின்பு அதில் மீன் சேர்த்து வேக விடவும்.

7.மீன் வெந்தவுடன் இறுதியாகக் கொத்தமல்லி தூவி இறக்கினால் சூப்பரான மீன் குழம்பு ரெடி.

Related Posts

Leave a Comment