தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் 100% முகக்கவசம் அணிய வேண்டும் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

by Editor News

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்றைய தினம் மட்டும் 123 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் தற்போதைய சூழலில் 726 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை கருத்துல் கொண்டு மீண்டும் முக கவசம் அணிவது குறித்த அறிவுறுத்தலை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டு இருக்கிறது. இது தொடர்பாக அறிவித்துள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை ஏப்ரல் 1 முதல் தமிழக முழுவதும் உள்ள அரசு பொது மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளுக்கும் வரும் பொது மக்கள் 100% கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment