124
தேவையான பொருட்கள் :
மினி இட்லி-1 கோப்பை அல்லது 4 இட்லி சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்
நல்லெண்ணெய் -1 மேஜைக்கரண்டி
நெய் – தேவையான அளவு
பொடி -1 மேஜைக்கரண்டி அல்லது காரத்திற்க்கு ஏற்ப
கறிவேப்பிலை-1 கொத்து
கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் காய வைத்து கறிவேப்பிலை சேர்க்கவும் உடனே மிதமான தீயில் இட்லி பொடி சேர்த்து அடுப்பை அனைத்து விட வேண்டும்.
அதன் பின்னர் இட்லியை சேர்த்து பொடி இட்லியில் நன்கு ஓட்டும் வரை கிளற வேண்டும்.
பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து ஒரு தட்டு போட்டு மூடி வைக்க வேண்டும்.
3 நிமிடம் கழித்து அதில் நெய் சிறிதளவும் கறிவேப்பிலையும் கொத்தமல்லியும் சேர்த்து கிளற வேண்டும்.
தேவைப்பட்டால் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். இப்படி செய்தால் காரசாரமான சுவையான பொடி இட்லி தயார்