ஹீமோகுளோபினை அதிகரிக்கும் உணவுகள் ..

by Editor News

இறைச்சி மற்றும் மீன் :

இறைச்சிகளிலும் மீன் வகைகளிலும் இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. தினசரி நாம் உண்ணும் உணவில் மீன் மற்றும் இறைச்சியா ஆகியவற்றை சரியான அளவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் நமது உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை நம் பெற முடியும்.

ப்ரோக்கோலி :

ஒரு கப் ப்ரோக்கோலி கிட்டத்தட்ட ஒரு நபருக்கு தேவையான அளவில் ஆறு சதவீதம் இரும்புச்சத்து அடங்கியுள்ளது. எனவே நமது தினசரி உணவில் பிரக்கோலி சேர்த்துக் கொள்வதின் மூலம் நமக்கு தேவையான இரும்புச்சத்தை நாம் பெற முடியும்.

கீரை :

ஒரு கப் கீரையில் கிட்டத்தட்ட 3.72mg அளவிலான இரும்பு சத்து அடங்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைத் தவிர கீரை வகைகளில் பொதுவாகவே நம் உடலுக்கு தேவையான பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் தாதுக்களும் நிறைந்துள்ளன. எனவே தினசரி உணவில் குறைந்த பட்சம் ஒரு வேளையாவது கீரை இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

மாதுளம்பழம் :

இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ள பழ வகைகளில் மாதுளை மிகவும் முக்கியமானது. குறிப்பாக மாதுளம் பழத்தின் விதைகளில் அதிக அளவில் ஊட்டச்சத்துகளும் தாதுக்களும் நிறைந்துள்ளன. இதை குழந்தைகளும் அதிகம் விரும்பி உட்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment