கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு …

by Editor News

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மே 13ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுமென்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13ம் தேதி தொடங்கும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 20ம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 21ம் தேதி நடைபெறும் எனவும், மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஏப்ரல் 24 என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

கர்நாடகவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசின் பதவிக்காலம் மே மாதம் 24 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து 224 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் மொத்தம் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

Related Posts

Leave a Comment