அதிக எடைகளை சுமந்து செல்லக்கூடிய எல்.வி.எம்-3 ராக்கெட் , வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அதிக எடையை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ரகத்தில் மற்றொரு வகையான ‘எல்.வி.எம்.எம்-3’ ராக்கெட்டை வடிவமைத்திருக்கிறது. இந்த எல்.வி.எம்-3 ராக்கெட் இஸ்ரோ வடிவமைத்த ராக்கெட்டுகளிலேயே அதிக எடை கொண்ட ராக்கெட், இதற்கு முன்பு ஜி.எல்.எஸ்.வி எம்.கே-3 என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. அதன்படி, இதற்கான 24 மணி நேரம் 30 நிமிடம் கவுண்ட்டவுன் நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில் திட்டமிட்டபடி, இன்று காலை 9 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது. இந்த எல்.வி.எம்-3 ராக்கெட் ஒன்வெப் இந்தியா-2 திட்டத்திற்கான 36 செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது. இந்த செயற்கைகோள்கள் வெள்ளி (வீனஸ்) கிரகத்தின் மேற்பரப்பில் எரிமலை செயல்பாடு குறித்து கண்டறிய பயன்படும் என்று கூறப்படுகிறது. எல்.வி.எம்-3 ராக்கெட் சுமந்து செல்லும் 36 செயற்கைகோள்களின் மொத்த எடை சுமார் 5,806 கிலோ ( 5.8 டன்) ஆகும்.
CONGRATULATIONS @isro!!#ISRO launches LVM3-M3/Oneweb India-2 Mission from Satish Dhawan Space Centre (SDSC) SHAR, #Sriharikota.#LVM3M3/#Oneweb pic.twitter.com/zz8BLRtqnP
— Doordarshan National दूरदर्शन नेशनल (@DDNational) March 26, 2023