188
அதிகாலையிலேயே குடும்பத்துடன் கோயிலுக்கு சென்ற அம்மாநில மக்கள் இறை வழிபாட்டில் ஈடுபட்டனர். தானேவில் உள்ள கோபினேஷ்வர் கோயிலில் வழிபாடு நடத்திய அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷின்டே, பல்லக்கை சுமந்து சென்றார்.
இதே போன்று நாக்பூரிலும் அம்மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பொதுமக்களுடன் சேர்ந்து குடி மட்வாவை உற்சாகமாக வரவேற்றார். பொதுமக்கள் தங்கள் பாரம்பரிய உடையுடன் வீதிகளில் இசை வாத்தியங்கள் முழங்க வண்ண கொடியுடன் வலம் வந்தனர்.
பல்வேறு இடங்களில் மராத்திய பாடலுக்கு அம்மாநில மக்கள் கலாசார நடனமாடி மகிழ்ந்தனர்.
சிறுவர்கள், சத்ரபதி சிவாஜி வேடமணிந்து வீதி உலா சென்றனர். மராத்தியர்களின் வீரத்தை பறை சாற்றும் வகையில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.